சிங்கப்பூரில் உயரிய செவிலியர் விருதைப் பெற்றுள்ள செவிலியர்கள்!!

சிங்கப்பூரில் உயரிய செவிலியர் விருதைப் பெற்றுள்ள செவிலியர்கள்!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 5 செவிலியர்கள் நாட்டின் உயரிய செவிலியர் விருதைப் பெற்றனர்.

ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் அவர்களது சேவையினை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தார்.

கொரோனா காலகட்டத்தில் எல்லா நாடுகளும் நோயின் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்தன. அந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட தங்கள் உயிரை பெரிதாக நினைக்காமல் தொடர்ந்து சேவையினை வழங்கியவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்.

செவிலியர்கள் தங்களின் கனிவான கவனிப்பால் இறக்கும் நிலையில் இருந்த நோயாளிகளை கூட குணப்படுத்தினர்.

அத்தகைய ஆபத்தான காலகட்டத்தில் அவர்கள் நாட்டிற்காக ஆற்றிய சேவை இன்றியமையாதது. கவனிப்பு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக செவிலியருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் சிறந்த செவிலியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த உயரிய விருதானது 2000 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

செவிலியர்கள் மற்றும் மகப்பேறு செவிலியர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள்.

தகுதியான செவிலியர்கள் ஒவ்வொருவருக்கும் 10,000 வெள்ளி ரொக்கமாக வழங்கப்பட்டது.

அரசு, தனியார் சுகாதார நிறுவனங்கள், சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு தகுதியான செவிலியர்களை தேர்ந்தெடுப்பதற்கு அந்த சுகாதார நிலையங்களும் பொதுமக்களும் அவர்களுடன் பணிபுரியும் சக செவிலியரும் அவர்களின் பெயரையும் குறிப்பிட வேண்டும்.

விருது பெற்ற செவிலியர்களுக்கு அதிபர் தர்மன் கையெழுத்திட்ட ரொக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவப்படுத்தினார்.