இழப்பிலிருந்து மீண்டு வரும் சிங்கப்பூர் நாணய வாரியம்!!

இழப்பிலிருந்து மீண்டு வரும் சிங்கப்பூர் நாணய வாரியம்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாணய வாரியம் 3.8 பில்லியன் வெள்ளி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டில் 30.8 பில்லியன் வெள்ளி நிகர இழப்பில் இருந்து வாரியம் தற்போது தான் மீண்டு வருகிறது.

நாணய வாரியத்தின் மொத்த வருவாய் 25.2 பில்லியன் வெள்ளி என்று கணக்கிடப்படுகிறது.

அரசாங்கத்தின் வெளிநாட்டு முதலீட்டைப் பொறுத்தவரை தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது. அந்த முதலீடுகளால் நல்ல வருவாய் கிடைத்துள்ளது.

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான டாலர், யூரோ, பவுண்ட் மதிப்புகள் வலுப்பெற்றுள்ளன. அவற்றால் சிங்கப்பூரின் வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது.

உலகளாவிய அரசியல் பதட்டங்கள், அதிகரித்து வரும் சுய-பாதுகாப்பு, காலநிலை மாற்றம் போன்றவற்றின் தாக்கம் விநியோகச் சங்கிலியில் ஏற்படுவதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக நாணய வாரியம் தெரிவித்துள்ளது.