Singapore news

விண்வெளியில் நடத்தப்படும் கருத்தரித்தல் ஆய்வு!சிங்கப்பூரும் பங்கேற்கும்!

சிங்கப்பூரில் நேற்று, இன்று உலகளாவிய விண்வெளி,தொழில்நுட்ப மாநாடு நடைபெற்று வருகிறது.இதில் 5 உடன்பாடுகள் கையெழுத்திடப் பட்டுள்ளது.அதில் ஒன்று விண்வெளியில் கருத்தரித்தல் ஆய்வு.

விண்வெளியில் கருத்தரித்தல் பற்றி நடத்தப்படும் ஆய்வு ஒன்றில் சிங்கப்பூரும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தது.

மனித இனப்பெருக்க முறையின் போது நுண்ணி ஈர்ப்பு விசையும் கதிர்வீச்சும் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி ஆய்வு நடத்தப்பட போவதாக தெரிவித்தது.

அது மட்டுமல்லாமல் நீடித்த விண்வெளி பயணங்களுக்கும் ஆதரவளிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இந்த முயற்சியில் சிங்கப்பூர் விண்வெளி, தொழில்நுட்ப நிறுவனமும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் Yoong Loo Lin மருத்துவப் பள்ளியும் இணைந்து ஈடுபட்டுள்ளது.

உடன்பாடுகள் நாடுகளுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும். போலந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த கவனம் செலுத்தும்.