பொதுச் சேவை ஆணையத்தின் உபகாரச் சம்பள விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் சான் சுன் சிங்!!
சிங்கப்பூர்: பொதுச் சேவை துறையில் சேருபவர்கள் பிரச்சனைகளை முன்கூட்டியே அறியக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும் என கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.
முன்கூட்டியே திட்டமிடல் இருந்தால் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் உபகாரச் சம்பள விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பொதுச் சேவை துறையில் பணியாற்றுபவர்கள் மற்றவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு செயலாற்றுபவர்களாக இருக்கின்றனர்.
மேலும் சிங்கப்பூரர்கள் அவர்களின் முழு ஆற்றலை வெளிப்படுத்தவும் அவர்கள் உதவ வேண்டும் என்று சான் கூறினார்.
சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சியை தனிப்பட்ட சாதனைகளால் தீர்மானிக்கப்படாது என்றார்.மாறாக, ஒருங்கிணைந்த பங்களிப்பின் வெற்றியே தீர்மானிக்கப்படும் என பொதுச் சேவைத் துறையின் அமைச்சர் திரு.சான் குறிப்பிட்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இவர்களால் பாதிக்கும் மேற்பட்டவர் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு படிப்பதற்காக செல்கின்றனர்.
Follow us on : click here