சிங்கப்பூரில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நிதியுதவி!!
சிங்கப்பூர்: குடும்ப நலத் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதன் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
இதில் 90க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
அவர்களில், 75 சதவீத குடும்பங்கள் மாத வருமானம் 2,000 வெள்ளிக்கும் குறைவாக உள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 300 முதல் 550 வெள்ளி வரை பண உதவி கொடுக்கப்பட்டது.
இது மே 2022 முதல் கடந்த அக்டோபர் வரை இத்திட்டமானது அமலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் நிபந்தனையற்ற நிதியுதவி 75 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.
இதில் கூடுதல் நிதியுதவி பெற்றவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் மனநலத்தை மேம்படுத்தியுள்ளனர்.
இத்திட்டத்தில் பங்கேற்றவர்களில் 69 சதவீதம் பேர் பெண்கள் என கூறப்படுகிறது.
இந்த உதவித்தொகையானது தங்களை நம்பிக்கையுடன் நிதி முடிவுகளை எடுக்கவும் சுதந்திரமாக செயல்படவும் உதவியதாக பெண்கள் தெரிவித்தனர்.
Follow us on : click here