“நான் இந்நேரம் இறந்திருக்க வேண்டியது”- டோனல்ட் டிரம்ப்!!

“நான் இந்நேரம் இறந்திருக்க வேண்டியது”- டோனல்ட் டிரம்ப்!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசி உள்ளார்.

பென்சில்வேனியா மாநிலத்தில் ஜூலை 14 அன்று ஒரு பிரச்சார உரையை ஆற்றிய போது, ​​திரு. டிரம்ப் படுகொலை முயற்சிக்கு ஆளானார்.

கூட்டம் நடந்த இடத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் சுட்டதாக நம்பப்படுகிறது.

அதிபர் டோனல்ட் டிரம்ப் இச்சம்பவம் குறித்து பேசுகையில்,
துப்பாக்கி சூட்டில் நான் இந்நேரம் இறந்திருக்க வேண்டியது.
நான் உயிர் பிழைப்பதே ஒரு அதிசயம் என்று கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் சரியாக தான் தலையை திருப்பியதால் அது தன் காதை உரசிச் சென்றதாக கூறினார்.

நேராக நின்று இருந்தால் இந்நேரம் தோட்டாவால் அவரது உயிர் பலியாகி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிறகு, திரு.டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க மில்வாக்கி சென்றார்.

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு அங்கு 4 நாட்கள் நடைபெறவுள்ளது.

78 வயதான திரு. டிரம்ப், குடியரசுக் கட்சி வேட்பாளராக இந்த கூட்டத்தில் அவர் தனது துணை ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.