Singapore News in Tamil

NTUC Fairprice நிறுவனத்தின் மூத்த ஊழியருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு! நீதிமன்றம் தீர்ப்பு!

NTUC Fairprice நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த ஊழியருக்கு லஞ்சம் கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை.நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

NTUC Fairprice நிறுவனம் மீன் மொத்த வியாபார நிறுவனத்தில் மீன் வாங்குவதை உறுதிப்படுத்துவதற்காக கிட்டத்தட்ட 25,000 வெள்ளி லஞ்சமாக கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.குற்றம் சாட்டப்பட்ட நபர் 44 வயதுடைய Ngow Chun Siong.

இவர் Fish Vision Agro-tech எனும் மீன் மொத்த வியாபார நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் முதலாளியுடன் சேர்ந்து லஞ்சம் தந்துள்ளார்.

நிறுவனத்தின் முதலாளி மீதும், லஞ்சம் வாங்கிய ஊழியர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இவர்களுடைய வழக்குகள் முடிவு அடையவில்லை.