சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.வேலைச் செய்யும் இடத்தில் அவர்களுடைய முதலாளிகள் பாகுபாடு காட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்க உதவும் வகையில் புதிய சட்டம் வர உள்ளது.
மொத்தம் 20 பரிந்துரைகள் சட்டமாகவிருக்கிறது.அனைவரையும் நியாயமாக நடத்தும்படி பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.
இந்த சட்டம் ஊழியர்களுக்கு அனைத்து நிலையிலும் உதவியாக இருக்கும்.
ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் முதல் அவர்கள் வேலையிலிருந்து விலகும் தருணம் வரை அவர்களை நல்முறையில் நியாயமான போக்கைச் சட்டம் வலியுறுத்தும்.
பாதிக்கப்பட்டவர்கள் வேலையிட நியாயச் சட்டத்தின் கீழ் நடுவர் மன்றத்தில் இழப்பீடு கோரலாம்.ஊழியர்களுக்காக ஏற்கனவே முத்தரப்பு வழிகாட்டி இருக்கிறது.
அது நியாயமான வேலை நடைமுறையை வலியுறுத்தும் வழிகாட்டி ஆகும்.இந்த வழிகாட்டியின் படி ஊழியர் வேலையில் இருந்து தவறாக பணி நீக்கம் செய்து இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் இந்த புதிய சட்டத்தில் ஊழியர்கள் வேலையில் இருக்கும்பொழுது அவர்களுக்கு நியாயமற்ற முறையில் ஏதேனும் நடந்தால் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த புதிய சட்டம் ஊழியர்களுக்கு உதவும் நோக்கில் கொண்டு வர உள்ளது.