சிங்கப்பூரில் பின்தங்கிய குடும்பங்களுக்காக ஒதுக்கப்படும் $4.3 மில்லியன் நிதி உதவி!!
சிங்கப்பூர்: தென்மேற்கு சமூக மேம்பாட்டு கவுன்சில் குடும்பங்களுக்கு உதவ புதிய மானியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி 4.3 மில்லியன் வெள்ளி தென் மேற்கு சமூக உதவிக்கான நிதித்தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த நிதி உதவியினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 22,000 குடும்பங்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணைப் பிரதமர் கான் கிம் யோங் நேற்று காலை இந்த நிதியை தொடங்கி வைத்தார்.
தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய குடும்பங்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
தென்மேற்கு பகுதியில் மொத்தம் 18 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் சுமார் 120,000 வெள்ளி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் சுகாதார பொருட்கள் வழங்கப்படும்.
மளிகைப் பொருட்களை லாரிகளில் கொண்டு செல்வது, அடுக்குமாடி கட்டிடங்களின் காலி மாடிகளில் நடமாடும் சந்தை அமைப்பது என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
Follow us on : click here