பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே வலுவான பிணைப்பை ஏற்படுத்திய கேளிக்கை நிகழ்ச்சி!!

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே வலுவான பிணைப்பை ஏற்படுத்திய கேளிக்கை நிகழ்ச்சி....

சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை கவனிக்க முடியும் என்ற சூழ்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்கும் சூழல் குறைந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் அரசானது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வேடிக்கையான நிகழ்ச்சி ஒன்றை நேற்று (ஜூலை 13)ஏற்பாடு செய்திருந்தது.

இதில் வெஸ்ட் கோஸ்ட் மற்றும் பயனியர் பகுதிகளை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

‘மக்கள் கழகம் குடும்ப விளையாட்டு மைதானம்’ என்ற நிகழ்ச்சியில் விளையாட்டுகள் மூலம் பிணைப்பை மேம்படுத்தும் பல அம்சங்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் கலந்து கொண்டார்.

இனி வரும் மாதங்களில் திரு வோங் மேற்கொள்ளும் பல தொகுதி வருகைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.மேலும் அவர் அருகில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் ஃபுட் கோர்ட்டையும் அவர் சுற்றிப்பார்த்தார்.

அங்கு அவர் கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை சந்தித்தார்.

மேலும் இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள் இது போன்ற வேடிக்கையான நிகழ்ச்சிகளில் குழந்தைகளுடன் பங்கெடுத்தது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்ததாக கூறினர்.

 

Follow us on : click here ⬇️