சிங்கப்பூரர்கள் தேவையென நினைக்கும் அடிப்படை வசதிகள்!!

சிங்கப்பூரர்கள் தேவையென நினைக்கும் அடிப்படை வசதிகள்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் எவற்றையெல்லாம் அடிப்படை வசதிகளாகக் கருதுகிறார்கள் என்பதை பட்டியலிட ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.

அந்த பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, சிங்கப்பூரர்கள் ஸ்மார்ட் போன்கள், ஏர் கண்டிஷனிங் மற்றும் வெளிநாட்டு பயணம் போன்றவற்றையெல்லாம் அடிப்படை வசதிகளாக கருதுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

வீட்டில் ஒரு குளிர்சாதனப்பெட்டி அவசியம் என்று கிட்டத்தட்ட பலரும் கூறினர்.

வீட்டிற்கு வெளியே குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது முக்கியம் என்று பலர் சொன்னார்கள்.

குழந்தைகளுக்கு தனிப்பட்ட பாடப்பயிற்சி, தொலைக்காட்சி சேவைகளுக்கு கட்டணம் செலுத்துதல் மற்றும் ஹோட்டல்களில் காணப்படும் தங்கும் விடுதிகள் ஆகியவை தேவையற்றவை என்று பலர் கூறியிருக்கின்றனர்.

சாதாரண வாழ்க்கைக்கான 40 அடிப்படைத் தேவைகளை இந்த ஆய்வு பட்டியலிடுகிறது.

இந்த ஆய்வில் 4,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வு மே 2022 முதல் கடந்த ஆண்டு பிப்ரவரி வரை நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகள் SMU-DBS அறக்கட்டளை ஆய்வரங்கில் வெளியிடப்பட்டன.

ஆய்வின் முடிவு குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பட்டியலிடுகின்றன.

சில பொருட்கள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி பங்கேற்பாளர்கள் எப்படி உணருகிறார்கள் என்பது அவர்களின் வீடு மற்றும் வருமானத்தைப் பொறுத்தது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.