ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமான முறையில் கொல்லப்பட்ட 65 கங்காருகள்...
ஆஸ்திரேலியாவில் சுமார் 65 கங்காருக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் அல்லது வாகனம் மோதி கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கங்காருக்கள் மெல்போர்னில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொலைதூரப் பகுதியில் வாழ்கின்றன.
அவற்றில் மூன்று கங்காருக்கள் உயிருடன் இருந்தன.
ஆனால் அவை பலத்த காயம் அடைந்ததால் கருணைக்கொலை செய்யப்பட்டன.
இரண்டு கங்காரு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வனவிலங்கு சரணாலயத்தில் குட்டிகள் பராமரிக்கப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவில் கங்காருக்கள் பாதுகாக்கப்படும் விலங்கு வகை.
ஆனால் அவை அழியும் அபாயத்தை எதிர்கொள்ளவில்லை.
அவைகளை கொல்ல அரசிடம் அனுமதி பெற வேண்டி இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் சுமார் 30 மில்லியன் முதல் 60 மில்லியன் வரை கங்காருக்கள் காணப்படுகின்றன.
அவைகளின் அளவு கடந்த எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கங்காருக்கள் அடிக்கடி கொல்லப்படுகின்றன.
Follow us on : click here