AI தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூர் நிறுவனங்கள்!!
சிங்கப்பூர்: உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் முக்கியத்துவத்தை அறிந்த சிங்கப்பூர் நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்புகின்றனர்.
இந்த தகவலை NCS ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறினார்.
அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது மற்றும் பெரிய அளவில் பயன்படுத்துவது என்பதை பற்றி தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன.
NCS தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த 3,000 செயற்கை நுண்ணறிவு பயிற்சியாளர்கள் மற்றும் 300 நிபுணர்கள் அதற்கான ஆதரவை வழங்குவார்கள்.
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வலுப்படுத்த திறன் மேம்பாடு மற்றும் திறன் புதுப்பித்தல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவைகள் மூலம் புதிய திறமைசாலிகளை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்று திரு ஹெங் கூறினார்.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், NCS உடன் இணைந்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here