சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சி கழகம் கடந்த 2009-ஆம் ஆண்டு மூத்தோர்களுக்காக திட்டம் அறிவிக்கப்பட்டது.மீதம் உள்ள குத்தகைக் காலத்தைக் கழகத்திடம் திரும்பக் கொடுத்து பணம் பெறலாம்.
இந்த திட்டத்தில் மூத்தோர்கள் கழகத்திடம் மீதம் உள்ள குத்தகைக் காலத்தைத் திரும்ப கொடுத்து 200,000 வெள்ளி வரைப் பணம் பெற்றுள்ளதாக கழகம் கூறியது.
இதுவரை 70 விழுக்காட்டினர் திரும்பக் கொடுத்துள்ளனர்.
மூத்தோர்கள் அவர்களுடைய ஓய்வு காலத்திற்காக 100,000 வெள்ளியிலிருந்து 200,000 வெள்ளி வரைப் பணம் பெற்றுள்ளனர்.
இந்த திட்டத்தை சுமார் 10,000 ஆயிரம் மூத்தோர்கள் பயன்படுத்தி உள்ளதாகவும் கழகம் கூறியது.மூத்தோர்களுக்காக இன்னொரு திட்டமும் இருப்பதாக கூறியது.
மூத்தோர்கள் அவர்களுடைய ஓய்வு காலத்தில் வருமானம் பெறுவதற்கான திட்டம்.இவர்கள் நீக்குப்போக்கான குத்தகைக் காலத்தைக் கொண்ட ஈரறை வீட்டை வாங்கலாம் என்றும் கூறியது.
மூத்தோர்கள் இரண்டு அறை வீட்டை வாங்கும் போது மூத்தோர் குறுகிய குத்தகைக் காலத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு தேவைக்கேற்ப வீடுகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படுவதாகவும் கழகம் கூறியது.தீவெங்கும் இத்தகைய வீடுகள் கட்டப்படுவதாகவும் கழகம் கூறியது.