லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற அதிரடி சோதனை!! பறிமுதல் செய்யப்பட்ட தடைச்செய்யப்பட்ட பொருட்கள்!!
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவில் ஆறு வாரங்கள் நடந்த அதிரடி சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இந்த அமலாக்க நடவடிக்கையின் போது புகையற்ற புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அது சுமார் 600 கிலோவுக்கும் அதிகம்.
இந்த அமலாக்க சோதனை நடவடிக்கை மே 15 முதல் ஜூன் 30 வரை நடைபெற்றது. இதனை சுகாதார அறிவியல் ஆணையமும் (HSA), சிங்கப்பூர் காவல்துறையும்(SPF) இணைந்து சோதனை நடவடிக்கையை நடத்தின.
லிட்டில் இந்தியா, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மறைத்து வைக்கப்பட்ட புகையில்லா புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை ஜூலை 11-ஆம் தேதி(நேற்று) HSA மற்றும் SPF தெரிவித்தது.
புகையில்லா புகையிலை, எரிக்கப்படாமல் பயன்படுத்தக்கூடிய புகையிலை, மெல்லக் கூடிய புகையிலை,ஸ்னஃப்,ஸ்னஸ் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் அடங்கும்.இவை சிங்கப்பூரில் தடைச்செய்யப்பட்ட பொருட்கள்.
சுமார் $100,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தன.
பொதுமக்கள் சிங்கப்பூருக்குள் தடைச்செய்யப்பட்ட பொருட்களான புகையில்லா புகையிலை பொருட்களைக் கொண்டு வரவோ அல்லது வாங்கவோ கூடாது என்பதை HSA மற்றும் SPF நினைவூட்டியது.
Follow us on : click here