SATS நிறுவனம் தனது சேவைகளை மேம்படுத்த புதிய முயற்சி!!
சிங்கப்பூர்: விமான சரக்குகளை கையாளும் நிறுவனமான SATS தனது சேவைகளை புதுப்பித்துள்ளது.
SATS தனது Gateway Services வணிகத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
வணிகமானது இப்போது சிங்கப்பூர் ஹப் மற்றும் கேட்வே சர்வீசஸ் ஆசியா-பசிபிக் ஆகிய இரண்டு பிரிவுகளாக இயங்கவுள்ளது.
சிங்கப்பூரில் விமானப் போக்குவரத்துத் துறையின் போட்டித்தன்மையை அதிகரிப்பதில் சிங்கப்பூர் ஹப் பிரிவு கவனம் செலுத்துகிறது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் குழுமத்தின் சந்தைப் பங்கை அதிகரிக்கும் நோக்கத்துடன் கேட்வே சர்வீசஸ் ஆசியா-பசிபிக் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SATS இன் தலைமைச் செயலாக்க நிர்வாக அதிகாரி ஹென்றி லோ (Henry Lo) சிங்கப்பூர் Hub-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் கேட்வே சர்வீசஸின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான போப் சி, கேட்வே சர்வீசஸ் ஆசியா-பசிபிக் பிரிவிற்கும் அதே பொறுப்பை ஏற்க உள்ளார்.
இந்த இரு நியமனங்களும் அக்டோபர் முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here