பிப்ரவரி 10-ஆம் தேதி (நேற்று) துணைப் பிரதமருமான, நிதி அமைச்சருமான Lawerence Wong Tiktok காணொளியில் Forward Singapore திட்டத்தைப் பற்றியும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் வெளியாகும் தினத்தை குறித்தும் தெரிவித்தார்.
Forward Singapore திட்டத்தில் கருத்துகள் திரட்டப்படும். திரத்தப்பட்ட கருத்துக்களைக் கொண்டு அரசாங்கம் கொள்கைகளை மேம்படுத்தும் என்று கூறினார்.
வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி பிற்பகல் மூன்றரை மணிக்கு நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெளியிடப்படும்.
இத்திட்டத்தில் 14,000 க்கும் அதிகமான சிங்கப்பூரர்களை ஈடுபடுத்தியதாகவும் கூறினார்.
“இத்திட்டத்தில் சிங்கப்பூரர்கள் பல யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.இதில் சமூக முன்னேற்றம் குறித்தும், சமுதாய ஏற்றத்தாழ்வு குறித்தும், வசதி குறைவானவர்களுக்கு உதவி செய்தல், நல்ல வேலை கிடைப்பதற்கான வளர்த்துக் கொள்ளுதல் போன்ற பல யோசனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்´´ என்றும் கூறினார்.
இத்திட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் சிங்கப்பூரர்களுடன் ஒன்றிணைந்து தீர்வுகளைக் காண போவதாகவும் கூறினார்.
ஒரு சில தீர்வுகளைக் கண்டறிந்து அதில் கவனம் செலுத்தப்படும்.Lawrence Wong சிங்கப்பூர் துணைப் பிரதமராக கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றார். அதன்பின் அவர் Forward Singapore திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.