சிங்கப்பூர் மலேசிய காவல்துறையின் அதிரடி...!! இனி தப்ப வாய்ப்பே இல்லை...!!
சிங்கப்பூர்: எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் மற்றும் மலேசிய காவல்துறை உறுதியளித்துள்ளன.
நேற்று(ஜூன் 09) காலை ஜொகூர் பாருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இருநாட்டு உயர் அதிகாரிகள் அவ்வாறு தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் இரு தரப்புக்கும் இடையே மக்கள் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வெளிநாட்டு தரப்பினருடன் இணைந்து செயல்படுவது முக்கியம் என்றனர்.
இரு தரப்பினரும் இணைந்து சட்டவிரோத பந்தய கும்பலை பிடித்து,ஒரு வாரத்திற்கு பின் காவல்துறையின் கருத்துகள் வெளி வந்துள்ளன.
கடந்த வாரம் சிங்கப்பூர் காவல்துறை நடத்திய சோதனையில் 43 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தது.
அவர்களில் 4 சிங்கப்பூரர்கள் ஜொகூரில் பிடிபட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் அவர்களிடமிருந்து ரொக்கம், நகைகள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், 40க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் சுமார் 4 மில்லியன் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Follow us on : click here