என்ன...பிளாஸ்டரை பயன்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கணக்கிட முடியுமா...?
சிங்கப்பூர்: நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வியர்வை மூலம் இரத்த சர்க்கரை அளவை அளவிடும் பிளாஸ்டரை உருவாக்கியுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொரு தடவையும் இரத்தச் சோதனை மூலம் சக்கரை அளவினை கணக்கிடுவதற்கு பதில் பிளாஸ்டர் உதவி கொண்டு கணக்கிடும் முறை எளிதாக இருக்கும்.
எந்த சிகிச்சையும் இல்லாமல் தினசரி இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க முடியும்.இது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
குளுக்கோஸ் அடங்கிய வியர்வை மூலம் பரவும் இரத்த சர்க்கரை அளவை பிளாஸ்டர் அளவிடுகிறது.
மேலும், அது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகளை கண்காணிக்க உதவுகிறது.
நோயாளிகள் இரண்டு நிமிடங்களுக்கு தோலில் பிளாஸ்டரை ஒட்ட வேண்டும். பின்னர் அதை உடலில் இருந்து உரித்தெடுக்க வேண்டும்.
பிளாஸ்டரை உரித்த பிறகு அதை UV விளக்கு கீழ் வைக்க வேண்டும்.
பின்பு செயலி மூலம் நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கலாம்.
Follow us on : click here