DBS வங்கி மக்களுக்கு உதவும் நோக்கில் புதிய திட்டத்தை தொடங்க உள்ளது.5 மில்லியன் முறை உணவு வாங்க உதவி வழங்கும் திட்டம்.
மக்கள் ஒவ்வொரு முறை உணவு வாங்கும் போது அதன் விலையில் 3 வெள்ளி தள்ளுபடி செய்யப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது.
DBS வங்கியின் PayLah மூலம் உணவுக்கான விலையை செலுத்தினால் இந்த தள்ளுபடி கிடைக்கும்.
உணவகங்காடிக்காரர்களும் ,வாடிக்கையாளர்களும் இதைப் பற்றி தெரிந்ததும் இரு தரப்பினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒரு சிலர் CDC பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தாமல் PayLah முறையைப் பயன்படுத்துகின்றனர்.
வங்கியின் உதவி திட்டத்தைப் பற்றி தியோங் பாரு உணவங்காடி கடைக்காரர்களில் சிலருக்கு மட்டுமே இதைப் பற்றித் தெரிந்துள்ளது. இன்னும் சிலர் இதைப் பற்றி முழுமையாக அறியவில்லை.
குறைந்த விலையில் உணவு வாங்க DBS வழங்கும் இந்த சலுகை அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடரும் என்று அறிவித்தது.
ஒவ்வொரு வாரமும் PayLah கட்டண முறையைப் பயன்படுத்தும் முதல் 100 வாடிக்கையாளர் பயன் பெறுவர் என்றும் தெரிவித்தது.
இந்த தள்ளுபடியைத் தீவெங்கும் இருக்கும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவங்காடிகளில் பெறலாம்.