Latest Tamil News Online

இனி நீண்டக்கால அனுமதி அட்டைக்காக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் கட்டடத்திற்கு நேரடியாகச் செல்ல தேவையில்லை!

சிங்கப்பூரில் குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.

இனி நீண்டகால அனுமதி அட்டைகள் அச்சிடப்படாது என்று ஆணையம் தெரிவித்தது.

அட்டைகள் மின்னிலக்க முறையில் இந்த மாதம் 27-ஆம் தேதியிலிருந்து வெளியிடப்படும்.

மாணவர் அனுமதி அட்டைக்கும் ,சார்ந்திருப்போர் அட்டைக்கும் புதிய நடைமுறை பொருந்தும்.

இதுவரை அச்சிடப்பட்ட அனுமதி அட்டைகளை வைத்து இருப்போர் அதன் காலாவதி ஆகும் வரைப் பயன்படுத்தலாம்.

மின் அட்டைக்கு விண்ணப்பிக்க MyICA செயலி மூலமாகவோ அல்லது இணைய வழிச் சேவை மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

Singpass அட்டையை வைத்து இருப்பவர்கள் அவர்களுடைய மின் அட்டையை Singpass செயலில் பார்த்துக் கொள்ளலாம்.

அட்டைகளைப் பெற குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் கட்டடத்துக்கு நேரடியாகச் சென்று அச்சிடப்பட்ட அட்டைகளைப் பெற வேண்டும். ஆனால், இனிமேல் நேரடியாகச் செல்லத் தேவையில்லை.

நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.அட்டைகளை இழக்கும் நிலையும் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தன.