இந்தோனேஷியாவில் கொட்டி தீர்த்த கனமழை!! 18 பேர் காணவில்லை!!

இந்தோனேஷியாவில் கொட்டி தீர்த்த கனமழை!! 18 பேர் காணவில்லை!!

இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் பெய்த பலத்த மழையால் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் நிலச்சரிவில் காணவில்லை என அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் சுரங்கத் தொழிலாளர்கள், சட்டவிரோத சுரங்கத்திற்கு அருகே வசித்தவர்கள் என்று மீட்பு நிறுவனத்தின் தலைவர் கூறினார்.

மேலும் 164 பேர் கொண்ட தேசிய மீட்பு குழு, காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் காணாமல் போனவர்களை தேடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சாலையில் அதிக சேறும் மற்றும் மழை தொடர்ந்த பெய்து வருவதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலசரிவால் பல வீடுகள் மற்றும் பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக BNPB தெரிவித்தது.

கொரண்டலோ வட்டாரத்தில் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழைப் பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு BNPB கேட்டுக் கொண்டது.

சுமத்திர மாகாணத்தில் மே மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 50 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

 

Follow us on : click here ⬇️