சமூக சேம்பியன்சிப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட சிங்கப்பூரர்கள்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் மேலும் பல சமூக விளையாட்டுப் போட்டிகளை எதிர்பார்க்கலாம். இதில் அவர்கள் தங்களுடைய குடியிருப்பு பகுதிகளை பிரதிநிதித்து விளையாடலாம்.
மூத்த பங்கேற்பாளர்கள் இடம்பெறும் புதிய பிரிவுகளும் இடம்பெறும்.
மக்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினை பின்பற்றுவதற்காக விளையாட்டு அதிகாரிகள் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போதுள்ள சமூக சாம்பியன்ஷிப்பின் அடிப்படையில் சமூக விளையாட்டுகளில் பங்கேற்பதை விரிவுபடுத்தும் திட்டம் மே முதல் ஜூலை வரை தீவு முழுவதும் சமூக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மேலும் அதில் பங்கேற்கும் அணிகள் அந்தந்த குடியிருப்பு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்த விளையாடுகின்றன.
ஆகஸ்ட் மாதம் பேஸ்டா சுகன் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பிற்காக அணிகள் போட்டியிடுகின்றன.
கம்யூனிட்டி சாம்பியன்ஸ் ஷிப் நிகழ்ச்சியில் இவ்வாண்டு சுமார் 2800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும் அவர்கள் ஐந்து விதமான விளையாட்டு நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
Follow us on : click here