அடடே..டோவர் சாலையில் இதற்கென ஒதுக்கப்பட்ட இடமா...?
சிங்கப்பூர்:டோவர் சாலையில் பறக்கும் ட்ரோன்களுக்கான மற்றொரு புதிய இடம் திறக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள இந்த புதிய இடமானது ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு உள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆளில்லா விமானங்களை பறக்க அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒதுக்கப்பட்ட இந்த புதிய இடமானது விமானத்துறை மேன்மேலும் வளர்ச்சி அடைய உதவும் பாதைகளுக்கு வழிவகை செய்யும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆய்வாளர்கள் மற்றும் இளைஞர்கள் போன்றோர் பாதுகாப்பான இடத்தில் வானூர்திகளை செலுத்துவதன் மூலம் அனுபவத்தைப் பெறலாம்.அதற்கு வழிவகை செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் தெரிவித்தார்.
இந்த புதிய இடத்தில் ஜூன் 2025 வரை ஆளில்லா விமானங்களை இயக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோவரில் செலுத்த முன் அனுமதி எதுவும் தேவையில்லை. 200 அடிக்கு கீழே அல்லது 60 மீட்டருக்குள் மட்டுமே பறக்க வேண்டும்.அதனை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
பாண்டன் நீர்த்தேக்கத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் மீது ட்ரோன்களை ஓட்டுவதில் சில சவால்களை மக்கள் எதிர்கொண்டனர்.
Follow us on : click here