Singapore news

இனி,முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் கிருமி தொற்று இல்லைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தேவையில்லையா?

சிங்கப்பூர் அதன் கிருமி தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது.

வரும் பிப்ரவரி மாதம் 13-ம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் பயணிகள் நுழையும்போது முழுமையாக முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் தங்களுக்கு கிருமித் தொற்று இல்லை என்ற சான்றிதழை வழங்கத் தேவையில்லை.

இந்த நடைமுறை வரும் திங்கட்கிழமைலிருந்து நடப்புக்கு வரும்.முழுமையாக தடுப்பூசி போடாத குறுகிய கால வருகை பயணிகள் கோவிட்-19 பயண காப்பீட்டு அட்டையை வாங்க தேவையும் இருக்காது.

கிருமித் தொற்று சூழல் தற்போது சற்று சீராக இருக்கிறது.அனைத்துலக அளவில் கிருமித் தொற்று சூழல் மீண்டும் மோசமானதாக மாறினால் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப் படுத்தபடலாம் என்றும் தெரிவித்தது.

பயணிகள் இபோலோ போன்ற மற்ற கவலைக்குரிய பாதிக்கப்பட்டி இருந்தால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவித்தது.