பிப்ரவரி,9-ஆம் தேதி (நேற்று) கல்வி அமைச்சகம் ACS தொடக்கப்பள்ளி இடம் மாற்ற உள்ளதாக அறிவித்தது.
தற்போது ACS தொடக்கப்பள்ளி பார்க்கர் ரோட்டிலிருந்து தெங்காவிற்கு இடம் மாற உள்ளது.
2030-ஆம் ஆண்டிலிருந்து ஆண், பெண் இரு பாலரையும் அனுமதிக்கப்படுவார்கள்.இரு பாலரையும் அனுமதிக்கும் பள்ளியாக மாற்றப்படும்.
பார்க்கர் பள்ளியில் 2029-ஆம் ஆண்டு தொடக்கநிலை 1 இல் அனுமதிக்கப்படும் மாணவர்கள் அவர்களுடைய படிப்பு முடியும் வரைச் செயல் படும்.
ACS தொடக்கப்பள்ளி 2030-ஆம் ஆண்டு திறக்கப்படும்.இந்த பள்ளி திறக்கப்படும் போது பார்க்கர் பள்ளியில் பயிலும் மாணவர்களின் சகோதர, சகோதரிகள் ஏற்றுக் கொள்ளபடுவர்.
பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளும் 2039-ஆம் ஆண்டிற்குள் தெங்கா வளாகத்திற்கு மாறும் என்றும் கூறியது.
நடவடிக்கைகள் அனைத்தும் மாறும் வரை ACS தொடக்கப்பள்ளி பார்க்கர் வளாகத்திலும், தெங்கா வளாகத்திலும் செயல்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்தது.