கலிபோர்னியாவில் கொளுந்து விட்டு எரியும் தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

கலிபோர்னியாவில் கொளுந்து விட்டு எரியும் தீ!! போராடும் தீயணைப்பு வீரர்கள்!!

கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நீண்ட வெப்ப அலையின் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு கலிபோர்னியா முழுவதும் காட்டுத் தீ பரவியது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாநில தலைநகரான சாக்ரமென்டோவிற்கு வடக்கே சுமார் 70 மைல்கள் (113 கிலோமீட்டர்)தொலைவு வரை எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீயைக் தீயணைப்பு குழுவினர் கட்டுப்படுத்த போராடினர். பட் கவுண்டியில், ஓரோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 13,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

கலிபோர்னியாவில் நிலவி வரும் வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ உருவாகி பல்வேறு இடங்களுக்கு பரவியது.

புகழ்பெற்ற யோசெமிட்டி தேசிய பூங்காவிற்கும் தீ பரவியதாக கூறப்படுகிறது.

வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.

நேற்று மற்றும் இன்று வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் 1,000 ஹெக்டேர் நிலம் எரிந்துள்ளதாக கலிபோர்னியா தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.