சொந்த காரை போலீஸ் கார் போல அலங்கரித்த நபரின் தில்லாலங்கடி வேலை!!

சொந்த காரை போலீஸ் கார் போல அலங்கரித்த நபரின் தில்லாலங்கடி வேலை!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரர் ஒருவர் தனது சொந்த வாகனத்தை சிங்கப்பூர் காவல்துறை வாகனம் போன்று அலங்கரித்த 32 வயது மதிக்கத்தக்க நபருக்கு சிங்கப்பூர் காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளை நிற காரில் POLITE என்ற வாசகத்தை ஒட்டியுள்ளார். அவர் சிங்கப்பூர் போலீஸ் கார்களில் இருந்ததைப் போல வெள்ளை, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற ஸ்டிக்கர்களை ஒட்டி இருந்தார்.

கார் பார்ப்பதற்கு அசல் போலீஸ் வாகனம் போல் இருந்தது காரில் கியூஆர் குறியீட்டையும் ஒட்டியுள்ளார்.

அதனை ஸ்கேன் செய்து பார்த்தால் அவர் நடத்தும் ஐஸ்கிரீம் கடையின் இணையதளத்தை பார்க்கலாம் என எஸ்ஜி டிராஃபிக் நியூஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அல்லாத ஒருவர் சீருடை அணிந்தோ அல்லது சின்னத்தைப் பயன்படுத்துவதோ சட்டப்படி குற்றம் என்று காவல்துறை கூறியது.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சம் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 2,500 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கோ தனது காரை மட்டுமின்றி தனது பைக்கையும் அவ்வாறு அலங்கரித்துள்ளார். அவர் ஏற்கனவே டிக்டாக்கில் இது தொடர்பான வீடியோக்களை பதிவேற்றியுள்ளார்.

போலீஸ் வாகனம் போல இருந்தால், சாலையில் பாதுகாப்பாக ஓட்ட முடியும் என்றும் மற்றவர்கள் வழி விடுகின்றனர் என்றும் விசாரணையில் கூறினார்.

மேலும் அவர் இணையதளத்தில் மற்றவர்கள் இதைப் பின்பற்றலாம். இது எளிமையானது. ஸ்டிக்கர்கள் ஒட்ட செலவு குறைவு என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

அவர் காணொளி ஒன்றில் சாலையில் செல்லும் போது எதிரே வந்த வாகனம் வளைந்து கொடுத்து வழி விடுவது போன்ற வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.

கோவின் செயலுக்கு ஆதரவாக சில நெட்டிசன்கள் பேசியுள்ள நிலையில், தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.