சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட் மூலம் வருவோம். ஒரு பக்கம் போலி ஏஜன்ட்களும் இருக்க தான் செய்கின்றனர். தற்போது புதிதாக ஒரு யுக்தியைப் பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் வேலைக்கு வருவதாக இருந்தால் நமக்குத் தெரிந்த ஏஜென்ட் மூலமாகவோ அல்லது உங்கள் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஏஜென்ட்கள் மூலமாகவோ வருவது நல்லது. வேலையைப் பற்றிய முழு விபரமும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
Workers பெர்மிட் மூலம் வேலைக்கு வருபவர்களின் சம்பளம் முறை தினசரி (Daily Basics) முறையில் தருவார்களா என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக,8.00-8.00 மணி நேர வேலைக்கு மாதாந்திர(Monthly Basics)சம்பளமாக 900 டாலர்ஸ். அதே போல் 8.00-9.00 மணி நேர வேலைக்கு மாதாந்திர சம்பளமாக (Monthly Basics) 800 டாலர்ஸ்.(எடுத்துக்காட்டிற்கு மட்டுமே )
ஒரு சில கம்பெனிகளில் 8.00-7.00 மணி நேர வேலைக்கு 800 டாலர்ஸ் அல்லது 900 டாலர்ஸ் கொடுக்கிறார்கள்.சிங்கப்பூர் விதிப்படி ஊழியர் ஒரு மாதத்திற்கு அதிகபட்ச வேலை நேரமாக 72 கூடுதல் நேரம் (overtime) மட்டுமே வேலைச் செய்ய வேண்டும்.
இதை மாதாந்திர சம்பளம்(Monthly Basics)முறையாக இருந்தால் கூடுதல் நேரம் (Overtime)வராது. ஒரு சில ஏஜென்ட்கள் உங்களிடம் தெளிவாக சொல்லாமல் சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதற்கு மட்டுமே குறியாக இருப்பார்கள்.
அவர்கள் இவ்வளவு வெள்ளி சம்பளம், இவ்வளவு நேரம் வேலை, இவ்வளவு நேரம் கூடுதல் நேரம் (Overtime) செய்யலாம், தினசரி சம்பளம் முறையா அல்லது மாதாந்திர சம்பளம் முறையா என்று கூறுவார்கள்.
அவர்கள் கூறியதை நம்பி சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவோம். ஆனால் இங்கு வந்த பிறகு கூடுதல் வேலை நேரம் (Overtime)கிடையாது அல்லது அதற்கும் அதிகப்படியான நேர வேலையைச் செய்ய வேண்டும் என்ற நிலைமைக்கு ஆளாகலாம்.
இதுபோன்ற சூழ்நிலையை ஒரு சில ஊழியர்களுக்கு நிகழ்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலைக்கு ஆளாகாமல், ஏஜென்ட்களிடம் வேலை நேரம் 8 மணி நேரம் இருக்கிறதா? என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் கூறிய கூடுதல் வேலை நேரம் இருக்கிறதா? என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி நேரம் வேலை என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
அடிப்படை சம்பளம் (Basic salary) எவ்வளவு என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.கூடுதல் மணி (Overtime)நேர வேலைக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கம்பெனிகள், ஏஜென்ட்கள் ஏன் வேலை நேரத்தை அதிகப்படியாக கூறுகின்றனர்?
கூடுதல் மணி(Overtime) நேர வேலைக்கு Double pay அல்லது 1.5 டாலர் கொடுக்க வேண்டும். அதாவது,1.5 டாலர் என்றால் 1 மணி நேர கூடுதல் மணி (overtime) நேர வேலைக்கு 1.5 டாலர் சம்பளமாக கொடுக்க வேண்டும்.8 மணி நேர வேலை நேரத்தை விட அதிக வேலை நேரத்தைக் கூறி கூடுதல் வேலை நேரத்துக்கு (overtime) தர வேண்டிய சம்பளத்தைக் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. இதன் மூலம் கம்பெனிகளுக்கும், ஏஜென்ட்களுக்கும் லாபம் அதிகம்.
விடுமுறைப் பற்றி கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டுமா?
மாதாந்திர சம்பள(Monthly Basics)முறையாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உண்டா என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால், தினசரி சம்பள(Daily Basics)முறையாக இருந்தால் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் சம்பளம் கிடையாது.இதே மாதாந்திர சம்பளம்(Monthly Basics)முறையாக இருந்தால் எல்லா நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.
மாதாந்திர சம்பளம் முறையாக இருந்தால் உங்களுடைய 8 மணி வேலை நேரம் அடிப்படை சம்பளத்தையும், கூடுதல் மணிநேர(Overtime)வேலைக்கான சம்பளத்தையும் சேர்த்துக் கூட்டிப் பாருங்கள். அவர்கள் கூறிய சம்பளம் வருகிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பளம் குறைவாக அல்லது அதிகமாக வருகிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள். மாதாந்திர சம்பளம் முறையாக இருந்தால் வேலை நேரம், விடுமுறை, கூடுதல் மணி நேர(overtime)வேலை நேரம் , அதற்கான சம்பளம் ஆகிய அனைத்தையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
மாதாந்திர சம்பளம்(Monthly Basics)முறை நல்லது தான். ஆனால்,8 மணி நேர வேலைக்குரிய சம்பளமும்,கூடுதல் மணி நேர வேலை நேரத்திற்கான (overtime) சம்பளத்தையும் கொடுத்தால் மிகவும் நல்லது.
சிங்கப்பூரில் சில கம்பெனிகள் இரண்டு நாட்கள் விடுமுறை அல்லது மூன்று நாட்கள் விடுமுறை கொடுப்பார்கள்.
ஒரு சில கம்பெனிகளில் எல்லா வாரமும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கொடுப்பார்கள்.
சில கம்பெனிகளில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் வேலை பார்த்தால் கூடுதல் மணி நேர (overtime) அடிப்படையில் சம்பளத்தைத் தருவார்கள்.
ஒரு சில கம்பெனிகளில் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்தால் கூடுதல் மணி(Overtime) நேர வேலைச் சம்பளம் முறையில் கொடுப்பார்கள்.
மாதாந்திர சம்பளம் முறையாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் அதே சம்பளம் தானா என்று கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
இதனால் ஏஜென்ட்களிடம் எல்லாவற்றையும் பற்றி தெளிவாக கேட்டுத் தெரிந்துக் கொண்ட பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு கொண்டு செல்ல சொல்லுங்கள்.
“ விழித்திருங்கள்! கவனமாக இருங்கள்! சிங்கப்பூருக்கு பாதுகாப்பாக வருங்கள்! பயன்பெறுங்கள்!´´