ஜமைக்காவில் ஏற்பட்ட பேரல் புயலால் 11 பேர் பலி!!
ஜமைக்காவில் ‘பேரல்’ சூறாவளி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இந்த சூறாவளி ஏற்படுத்திய சேதத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி சென்றடைவது சற்று கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
5 ஆம் நிலையிலிருந்த புயல் வலுவிழந்து தற்போது 2-வது வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூறாவளி மெக்சிகோ வளைகுடாவை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரீபியன் பிராந்தியத்தில் உள்ள சிறிய தீவுகளில் சூறாவளியால் பெரும் சேதம் மற்றும் மின் தடைகள் பதிவாகியுள்ளன.
இந்த சூறாவளி மணிக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் நகர்வதாக ஆய்வு நிலையம் கூறியிருந்தது.
மேலும் அப்பகுதிகளில் கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
ஜமைக்காவில் தொடர்ந்து 12 மணிநேரம் கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது.
தலைநகர் கிங்ஸ்டனில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
தற்போது மெக்சிகோவிற்கும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here