கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவிட்-19 கிருமி பரவலைக் கட்டுப்படுத்தவும் அதற்கான நடவடிக்கைகளை முடிவு செய்ய பணிக்குழு தொடங்கப்பட்டது.
இந்த பணிக்குழு அரசாங்கம் ஒருங்கிணைந்த முறையில் துரிதமாக நடவடிக்கை எடுக்க தொடங்கப்பட்டது.
சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் பச்சை நிறமாக மாறப் படுவதால், இனி இந்த குழு செயல்படாது.அதற்கான தேவையும் இருக்காது.
சுகாதார அமைச்சகம் கோவிட்-19 சூழலைக் கையாளும்.நாட்டில் ஒரு வேளை கிருமி பரவல் அதிகரித்தால் அந்த சூழலைச் சமாளிக்க ஏற்ப குழு அமைக்கப்படும்.இந்த பணிக்குழு பிப்ரவரி,13-ஆம் தேதி திங்கட்கிழமையிலிருந்து செயல்படாது.