சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமி பரவல் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டிலிருந்து படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து இன்னும் சில கட்டுப்பாடுகள் தளரத்தப்பட உள்ளது.
• பொதுப் போக்குவரத்தில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டாம்.
• சிங்கப்பூரின் DORSCON எச்சரிக்கை நிலை நிறம் பச்சையாக மாற்றப்பட்டுள்ளது.
• கோவிட்-19 பரிசோதனைக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்படும்.அதேபோல் சிகிச்சைக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்படும்.
• வெளிநாட்டு ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் விடுதியில் இருந்தவாறு குணமடையலாம்.
• இனி,`Trace Together, Safe Entry´ தேவையில்லை.இதுவரை திரட்டிய அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டன.
• இனி, சிங்கப்பூரில் கோவிட்-19 பணிக்குழு செயல்படாது.
• தடுப்பூசி போடாத பயணிகள் இனி கிருமி தொற்று இல்லைச் சான்றிதழை வழங்கத் தேவையில்லை.