ஷாங்டாங் மாகாணத்தை தாக்கிய சூறாவளி!!
சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் பெய்ஜிங்கிலிருந்து 530 கிமீ தெற்கே உள்ள டோங்மிங் கவுண்டி நகரம் ஜுலை 5ம் தேதி பிற்பகல் புழுதி சூறாவளியை எதிர்கொண்டது.
அந்த சாம்பல் சூறாவளி அதிவேகமாக நகர்ந்து குப்பைகளை வானில் கொண்டு செல்வதை வெளியிடப்பட்டுள்ள படங்களில் காணலாம்.
இந்த சூறாவளி தாண்டவத்தால் ஒரு உயிரிழந்துள்ளார். மேலும் கடுமையான சேதங்களும் ஏற்பட்டுள்ளது.
சுமார் 79 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளுர் அதிகாரிகள் கூறினர்.
இந்த சூறாவளியின் கோர காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சாலைகளில் கற்களாலும்,மரத்துண்டுகளால் நிரம்பியும்,கடைகள்,கார்கள் உடைந்த நிலையிலும் மற்றும் மரங்கள் வேரோடுசாய்ந்த நிலையில் இருப்பதையும் காணலாம்.
கோர தாண்டவத்தில் பாதித்த மக்களை மீட்கும் பணி மற்றும் நிவாரண பணியும்
துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சீனா கடந்த சில மாதங்களாகவே கனமழை மற்றும் வெப்ப அலை காரணமாக கடுமையான சூழலை சந்தித்து வருகிறது.
Follow us on : click here