Singapore News in Tamil

சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை!

சிங்கப்பூரில் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமைலிருந்து பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிந்துக் கொள்ள தேவையில்லை.

இனி சுகாதார, பராமரிப்பு நிலையங்களின் உட்புறங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய தேவையில்லை.

தற்போது சிங்கப்பூரில் Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.அதில் ஒரு கட்டமாக, முகக்கவசத்தைப் பொது போக்குவரத்து இடங்களில் கட்டாயமாக அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளது.சற்றுமுன் இதனைச் சுகாதார அமைச்சகம் அறிவித்தது.

ஒரு சில இடங்களில் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது,மருத்துவமனை வார்டுகள்,மருந்தகங்கள்,செவிலியர் இல்லங்கள் போன்ற இடங்களில் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டது.

இந்த இடங்களில் இருக்கும் நோயாளிகள்,அங்கு இருப்போரைப் பார்க்கச் செல்வோர்,அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் இது பொருந்தும்.

சுகாதாரத் துறையைத் தவிர்த்து மற்ற சில நிறுவனங்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியது.

உணவு பாதுகாப்பு காரணங்களுக்காக உணவு கையாளுபவர்கள் விருப்பம்படி முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கலாம். அதேபோல் தனியார் நிறுவனங்களும் அவர்களின் விருப்பம்படி கட்டாயமாக்கிக் கொள்ளலாம்.

முகக்கவசம் அணிவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் குறையும்,குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மூத்தோர்கள் கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். அவர்கள் நலன்கருதி சுகாதார அமைச்சகம் கூறியது.