அதிர்ச்சி..! கடையில் வாங்கிய மீன் சூப்பில் பிளாஸ்டிக் கிளிப்பா..?

அதிர்ச்சி..! கடையில் வாங்கிய மீன் சூப்பில் பிளாஸ்டிக் கிளிப்பா..?

சிங்கப்பூர்: ஒரு உணவகத்தில் வாங்கிய மீன் சூப்பில் பிளாஸ்டிக் கிளிப் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

உணவகத்தை நிர்வகித்து வரும் FairPrice Group குழுமம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.

ஃபேஸ்புக் பயனாளியான CT Zuraihah, Jurong Point கடை தெருவில் உள்ள Cantine உணவகத்தில் சூப்பை வாங்கியுள்ளார். அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிட்டார்.

சூப்பைக் கிளறிக்கொண்டிருந்தபோது, ​​அதன் அடியில் ஒரு கிளிப்பைக் கவனித்தார். சுராய்ஹா அதை படம்பிடித்து கம்ப்ளைன் சிங்கப்பூர் என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றினார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் இது தெரியாமல் நடந்திருக்கலாம் என கூறினர்.கடைக்காரர்கள் சிலர், வாடிக்கையாளர்கள் கேட்டதை ஒரு பேப்பரில் எழுதுவார்கள் பின்பு அதை பொட்டலத்துடன் கட்டுவார்கள்.அதற்கு பயன்படுத்திய கிளிப் கூட சூப்பில் விழுந்திருக்கலாம் என நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று FairPrice Group தெரிவித்துள்ளது.