Singapore news

சிங்கப்பூர் அரசாங்கத்தின் செலவு உள்நாட்டு மொத்த உற்பத்தி விழுக்காட்டைத் தொடலாம்!

பிப்ரவரி 8-ஆம் தேதி நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.அதில், வரும் ஆண்டுகளில் செலவுகளை ஈடு செய்வதற்கு வருமானம் போதாது என்று குறிப்பிட்டு இருந்தது.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் செலவுகள் கூடிய விரைவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விழுக்காட்டைத் தொட்டுவிடும். அதாவது சுமார் 20 விழுக்காட்டைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது.

வரும் 2026-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டுக்குள் செலவுகள் இந்த அளவை அடைந்துவிடும் என்று கணிக்கப்படுவதாக தெரிவித்தது.

20 விழுக்காட்டை செலவுகள் வருகிற 2030-ஆம் ஆண்டிற்குள் தாண்டலாம் என்றும் கூறியது.செலவின் உயர்வுக்குச் சுகாதார துறையே முக்கிய காரணமாக இருக்கும் என்று குறிப்பிட்டது.

தற்போது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சிங்கப்பூர் 18 விழுக்காடு செலவு செய்கிறது.அதன் வருமானம் 18.5 விழுக்காடாக இருக்கிறது.