Singapore Job News Online

துருக்கி,சிரியா நிலநடுக்கம்!சிங்கப்பூர் சிறப்பு அணி Adana விற்கு விரைவு!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை இதுவரை 11,000 த்தையும் தாண்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்று உதவ சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதனையடுத்து,சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் அனுப்ப முடிவு செய்தது.

தற்போது அவர்கள் அங்கு சென்று அடைந்ததாக முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Adana எனும் நகரில் இருப்பதாகவும்,20 அதிகாரிகள் கொண்ட குழுவாக சென்றுள்ளதாக முகநூல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது.

இந்த சிறப்பு அணியில் பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள், மருத்துவ உதவியாளர்கள்,ஒரு மருத்துவர் ஆகியோர் உள்ளனர்.

குடிமைத் தற்காப்பு படையைச் சேர்ந்த மேலும் 48 அதிகாரிகள் அடுத்த 48 மணி நேரத்தில் Adana விற்கு செல்வார்கள் என்று தெரிவித்தது.

இந்த அணியின் பெயர் Operation Lionheart சிறப்பு பிரிவில் 79 அதிகாரிகள் இருக்கின்றனர்.

இந்த சிறப்பு பிரிவு 1990-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இதுவரை 19 இடங்களுக்கு சென்று மனிதாபிமான உதவிகளைச் செய்து இருக்கிறது.