தெங்கா வட்டாரத்தில் புதிய அம்சம்!!
சிங்கப்பூரில் தெங்கா வட்டாரத்தில் முதல் பேரங்காடி,உணவகங்காடி சில நாட்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து புதிய பேருந்துமுனையம் திறக்கப்படவுள்ளது. அது வரும் 21-ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய பேருந்து சேவை எண் 871 புக்கிட் பாத்தோக், புக்கிட் கோம்பாக் மற்றும் பியூட்டி வோர்ல்ட் பகுதிகளுக்கு செல்லும்.
தெங்கா வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புது புது அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
முதியவர்கள்,குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் ஏற்ற வசதிகளுடன் இந்த புதிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
Follow us on : click here