சிங்கப்பூரில் இன்று Block 2 Kitchener ரோட்டில் உள்ள கட்டிடத்தின் 13-ஆம் மாடியில் காலை 11.00 மணியளவில் தீப்பற்றிக் கொண்டதாக குடிமை தற்காப்புத் தகவல் கிடைத்தது.
அங்கு வந்த குடிமை தற்காப்பு படையினர் தண்ணீரைப் பீச்சியடித்து தீயை அணைத்தனர். தீ பற்றிய வீடு மற்றும் அதன் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் 7 பேர் வெளியேற்றப்பட்டனர்.
குடிமை தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே சுமார் 80 பேரைக் கட்டிடத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறினர்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டனர்.Raffles மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல விருப்பமில்லை என்று கூறி மறுத்துள்ளார்.
வீட்டு அறையில் மின் சைக்கிளுக்கு மின்னூட்டம் செய்த போது தீ பற்றிக் கொண்டதாக குடிமை தற்காப்பு படை கூறியது.
இது போன்ற தீ சம்பவங்களை தவிர்ப்பதற்கு அதை நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் மின்னூட்டம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றுக் குடிமை தற்காப்புப் படை கேட்டுக்கொண்டது.