துருக்கிலும், சிரியாவிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் நாட்டையே உலுக்கியது.இதனால் கட்டிடங்கள் அனைத்தும் சரிந்து விழுந்தது.
இந்தக் கட்டிட இடுப்பாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர்.
இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் கட்டிட இடுப்பாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
சிரியாவில் சரிந்து விழுந்த கட்டடத்தின் கீழ் இருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. தனது இறந்த தாயுடன் இணைக்கப்பட்ட தொப்புள் கொடியுடன் புதைக்கப்பட்டு இருந்தது.
குழந்தையின் பெற்றோர்கள் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட குழந்தையைப் பார்த்து அனைவரும் கண் கலங்கினர்.
மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்,“ குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் ஆகி இருக்கலாம்.குழந்தையின் உடல் வெப்பநிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவித்தார்.குழந்தை நலமுடன் இருப்பதாகவும்´´ கூறினார்.