இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!!

இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!!

ஜூன் 14-ஆம் தேதி மகாராஜா படம் வெளியானது. நித்திலன் சாமிநாதன் தயாரிப்பில் வெளியான விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்டி மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

மகாராஜா வெளியாகி இரண்டு வாரங்களான நிலையில் பாக்ஸ் ஆபிஸில் நூறு கோடி வசூலை தாண்டியுள்ளது.

அரண்மனை 4 படம் மட்டுமே இந்த வருடம் 100 கோடி வசூல் சாதனை படைத்தது.

மேலும் மகாராஜா படமும் இந்த வசூலை எட்டியுள்ளது. அரண்மனை 4 படத்தைத் தொடர்ந்து இப்படமும் 100 கோடி வசூல் சாதனையை படைத்துள்ளதால் இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை ஈட்டிய இரண்டாவது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

100 கோடி வசூலை தாண்டிய படம் விஜய் சேதுபதிக்கு இதுவே முதல் முறை.

இதன் மூலம் அவர் முந்தைய படங்களில் ஏற்பட்ட தோல்விகளை சரி செய்துள்ளார்.

மகாராஜா படத்தின் கதை சுருக்கம் மகளுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு தரும் தண்டனையே ஆகும். அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளிவர உள்ள படங்களுக்கான வியாபாரங்கள் சிறப்பாக நடப்பதற்கான வழிவகை செய்துள்ளார்.

மகாராஜா படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உள்நாடுகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் `மகாராஜா’ வெற்றிக்கரமாக ஓடுகிறது.