உலக சுகாதார நிறுவனம் துருக்கி,சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை பற்றி கூறியது. இந்த நிழல்நடுக்கத்தால் 23 மில்லியன் பேர் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தது.
தங்கள் தரப்பில் இருந்து நீண்ட கால உதவிகளை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தது.
சுமார் 5 மில்லியன் பேர் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.இவர்கள் உட்பட சுமார் 23 மில்லியன் பேருக்கு உதவி தேவைப்படலாம்.
இவ்வாறு உலகச் சுகாதார நிறுவன அவசர சேவைப் பிரிவு மூத்த அதிகாரி Adelheid Marschang கூறினார்.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி வடக்கு-மேற்கு சிரியாவில் உள்ள சுகாதார கட்டடங்கள் கடுமையாகச் சேதப்பட்டு இருக்கலாம் என்றும் கூறினார்.