கடலில் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?
ஜூலை 2-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தில் கடலில் எண்ணெய் கசிவு கலந்த விவகாரம் குறித்த அமைச்சர்நிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையை தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond Lee,Chee Hong Tat ஆகிய இரு அமைச்சர்களும் வெளியிட்டனர்.
கடலில் கலந்துள்ள எண்ணெய் கசிவால் தற்போது வரை கடல்சார்ந்த உயிரினங்கள் பாதிக்கப்படவில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond Lee கூறினார்.
மேலும் எண்ணெய் படலங்களால் உயிரினங்களின் மீதான தாக்கம் குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.
தென் தீவுகளில் இரண்டாவது கடல் பூங்கா திட்டம் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திட்டத்தில் மாற்றம் இல்லை என்று அவர் கூறினார்.
தேவை ஏற்பட்டால் கடல்வாழ் உயிரினங்களை மீட்டு பாதுகாக்க தேசிய பூங்கா கழகம் நடவடிக்கை எடுக்கும் என லீ கூறினார்.
Follow us on : click here