Singapore Job Vacancy News

தவறான கைது நடவடிக்கை வழக்கு!20,000 வெள்ளி இழப்பீடு! உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சிங்கப்பூரில் நபர் ஒருவரை காவல்துறை தவறாக கைது செய்தது. அதன் வழக்கிற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய்ந்து வருவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறினார்.

நீதிமன்றமும் காவல்துறையும் இந்த விவகாரத்தில் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருப்பதையும் அவர் கூறினார். இந்த வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இதற்காக புதிய சட்டத்தை இயற்றுவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு Mah Kiat Seng என்பவரைக் காவல்துறை அதிகாரி கைது செய்தார்.

இந்த நிகழ்வு சன்டெக் சிட்டி கடைத் தொகுதியில் நிகழ்ந்தது. பெண்மணி ஒருவர் தம் மகனை Mah kiat திடீரென்று தலையில் தொட்டதாக காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன்பின் mah kiat கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்.

Mah kiat மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அதிகாரி நம்பவில்லை. காவல்துறை அதிகாரி நல்லெண்ண அடிப்படையில் நடந்து கொள்ளவில்லை என்று நீதிபதி ஜெயரத்தினம் அவர் தரப்பில் கூறினார்.

கடந்த மாதம் நீதிமன்றம் Mah kiat யைத் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டதற்கு 20,000 வெள்ளி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.அவருக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது.

கொள்கைக்கும் சட்டங்களுக்கும் இடையில் இடைவெளி இருந்தால் அதனைச் சீராக்க அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டு வரும் என்றார்.

கைது செய்யப்பட்டவரை காவல்துறை அதிகாரிக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தை நீதிமன்றம் கண்டறிந்தது.

காவல்துறை அதிகாரிகள் சம்பவத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் நியாமாக பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

காவல்துறையின் நடவடிக்கைகளை நியாயமற்ற முறையில் குறை கூறினால் மக்களிடம் அவர்களுக்குரிய நம்பிக்கையைக் குறைய இது காரணம் ஆகிவிடும்.

நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த வழக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கா. சண்முகம் பதிலளித்தார்.

இது போன்ற சம்பவங்கள் சில நாடுகளில் நடந்திருப்பதாகவும் கூறினார். சிங்கப்பூரிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தடுக்க வேண்டும்.