பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!! சிறுவன் உட்பட 5 பேர் பலி!!
தெற்கு பிலிப்பைன்ஸின் ஜாம்போங்கா நகரில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் நான்கு பேர் பட்டாசு கிடங்கில் வேலை செய்த ஊழியர்கள், கிடங்கில் வேலை செய்யும் ஊழியர் ஒருவரின் நான்கு வயது மகன் உட்பட ஐந்து பேர் இந்த விபத்தில் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்த விபத்தில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் உடல்நிலை மோசமாக உள்ளதாக நகர பேரிடர் அலுவலகம் கூறியுள்ளது.
இந்த பயங்கர வெடி விபத்தால் 20 மீட்டர் பள்ளம் உருவாகியுள்ளது.
மேலும் சுவர்கள் உடைந்து,அருகே உள்ள குளிர்பான தொழிற்சாலை, தானியங்கள் மற்றும் மாவு கிடங்கு,அப்பகுதியில் உள்ள வீடுகள் உள்ளிட்டவைகள் இந்த வெடி விபத்தில் கடுமையாக சேதமடைந்தன.
பட்டாசு வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளே காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
அதன் பாதிப்பானது சுமார் 3,000 சதுர மீட்டருக்கு மேல் உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் சிரமப்பட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு ஆய்வாளர் லூய்கி சான் கூறினார்.
Follow us on : click here