துப்பாக்கி சூடு சம்பவம்!! திருமண நிகழ்வை துக்க நிகழ்வாக மாறிய சோகம்!!

துப்பாக்கி சூடு சம்பவம்!! திருமண நிகழ்வை துக்க நிகழ்வாக மாறிய சோகம்!!

பிரான்ஸ்: பிரான்சில் உள்ள தியான்வில்லே நடந்த திருமண விழாவில் முகமூடி அணிந்த நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தரப்பில் ஜூன் 30-ஆம் தேதி கூறியது.

கிடைத்த ஆதாரங்கள் வைத்து பார்க்கும் பொழுது இந்த துப்பாக்கி சூடு சம்பவம் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு தொடர்புள்ளதாக தெரிகிறது.

இந்த திருமண விழாவில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். அதில் இரண்டு பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டது.
அவர்களில் ஒருவரின் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பித்து விட்டனர்.

மூன்று கனரக வாகனங்களில் ஆயுதமேந்திய நபர்கள் மண்டபத்தினுள் நுழைந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தினர்.

இவர்கள் BMW வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. வாகனம் எங்கிருந்து வந்தது என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் தியோன்வில் லக்சம்பர்க் மற்றும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு அருகே அமைந்துள்ளது. போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக துப்பாக்கி சூட்டின் காரணமாக இருக்கலாம் என சட்ட அமலாக்க உறுப்பினர்கள் நம்புவதாக கூறுகிறார்கள்.