Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் சட்டவிரோத மின்சிகரெட்டுகள் விற்பனை! நடவடிக்கைகள்! தடுக்கும் முயற்சி!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்வுகளைத் தடுக்கும் முயற்சிகளைப் பற்றிக் கேட்கப்பட்டது.

மின் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக சமூக ஊடங்களிலும், தொடர்பு தளங்களிலும் சுகாதார அறிவியல் ஆணையம் கண்காணித்து வருகிறது. இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

சமூக இணையதளங்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார். மின் சிகரெட் விற்பவர்களின் பதிவுகளை Instagram,Facebook,Carousell போன்ற தளங்களில் பதிவுகளை அகற்றவும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் சட்டவிரோத மின்சிகரெட்டுகளின் இறக்குமதிகளைக் கண்டுபிடிக்கிறது. கண்டறிந்த சட்டவிரோத மின்சிகரெட்டுகளின் இறக்குமதிகளைச் சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு அனுப்புகிறது. சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு உதவி செய்வதாகவும் கூறினார்.

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. சுகாதார அமைச்சகமும்,சுகாதார மேம்பாட்டு வாரியமும், கல்வி அமைச்சகமும் இணைந்துச் செயல் பட்டு இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

பிள்ளைகளுக்கு மின்சிகரெட்டுகள் இல்லாத வாழ்க்கையைப் பின்பற்ற ஊக்குவிக்கின்றனர். இவ்வாண்டின் முற்பகுதியில் சுகாதார மேம்பாட்டு வாரியம் இணைய வழி பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாகவும் கூறினார் .அதில் மின் சிகரெட்டுகள் இல்லாத வாழ்க்கையை ஊக்குவிக்கும் முயற்சிக்கு இணையவழி பிரச்சாரம் வழி வகுக்கும்.

நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு சுகாதார அமைச்சர் Ong Ye Kung எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார்.