சிங்கப்பூரை குறிவைக்கும் பயங்கரவாதிகள்... விழிப்புடன் இருப்பது அவசியம்- சண்முகம்
சிங்கப்பூர்: பயங்கரவாதிகள் தொடர்ந்து சிங்கப்பூரை குறி வைப்பதாக உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு.சண்முகம் கூறியுள்ளார்.
மலேசியாவில் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள் மற்றும் சிலர் கைதானது போன்ற அச்சுறுத்தல்கள் தொடர்பான சம்பவங்களால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.
மேலும் சிவில் சர்வீஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மலேசியாவும் சிங்கப்பூரும் அடுத்தடுத்து இருப்பதால், ஜோகூர் பாலத்தைத் தாண்டி எது நடந்தாலும் அது சிங்கப்பூரைப் பாதிக்கும் என்றார்.
“தற்போது சிங்கப்பூரில் குறிப்பிட்ட அச்சுறுத்தல் இல்லை என்றாலும், சாத்தியமான ஆபத்துகள் குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று திரு. சண்முகம் கூறினார்.
மேலும் இரு நாடுகளும் நல்ல உறவில் இருப்பதால் மலேசியாவில் ஏற்பட்ட சம்பவங்கள் சிங்கப்பூருக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
வார இறுதியில், ISIS உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேரை மலேசிய போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here