Latest Sports News Online

சிங்கப்பூரில் 5 இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் உயர்வு!1 வெள்ளி உயரும்!

வருகிற பிப்ரவரி,13-ஆம் தேதியிலிருந்து மின்னியல் சாலைக் கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.

மின்னியல் சாலைகள் இருக்கும் இடங்களிலும், அதன் நேரங்களிலும் கட்டணம் அதிகரிக்கப்படும். போக்குவரத்து நிலவரங்களை இம்மாதத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாக ஆணையம் தெரிவித்தது.

பல பகுதிகளில் உள்ள விரைவுச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளதாகவும் தெரிவித்தது. இது போன்ற போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.

குறிப்பிட்ட 5 இடங்களிலும் , 9 நேரங்களிலும் மின்னியல் சாலைக் கட்டணம் 1 வெள்ளி உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதைத் தவிர மற்ற இடங்களிலும் நேயர்களிலும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

போக்குவரத்து நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, அதேபோல் மின்னியல் சாலைக் கட்டணத்தை மேலும் விரிவு படுத்துவதற்கு மதிப்பிடப்படும் என்று தெரிவித்தது.