சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டாயம் கட்டணம் விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.பைகளுக்கு பெரிய பேரங்காடிகளில் குறைந்தப்பட்சம் 5 காசு கட்டணம் விதிக்க வேண்டும்.
முதல் கட்டமாக ஆண்டு வருமானமாக 100 மில்லியன் வெள்ளி ஈட்டும் பேரங்காடிகளுக்கு இந்த திட்டம் நடப்புக்கு வரும்.இதில் NTUC Fairprice,cold Storage,Giant,Sheng Siong, Prime ஆகிய பேரங்காடிகளும் அடங்கும்.
முதல் வாசிப்பாக குளிர்பான பாட்டில்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டமும் முன் வைக்கப்பட்டது.தீவெங்கும் கழிவுகளைக் குறைக்கவும்,மறுசுழற்சி முறையை ஊக்குவிக்க முயலவும்,தேசிய சுற்றுப்புற அமைப்பு நீடித்த தன்மையுடன் இருப்பதற்காகவும் சுற்றுப்புற அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பைகளுக்கு கட்டணம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு புதிய திட்டம் நடப்புக்கு வரும்.கட்டணம் அனைத்து வகையான பைகளுக்கும் பொருந்தும்.இந்த சட்டத் திருத்த மசோதா பொட்டலமிடும் நடவடிக்கைக்கு வழிவகைக்கும். இதன் மூலமாக உணவு விரயத்தைக் குறைக்கலாம்.
பேரங்காடிகளுக்கு நிபந்தனைகளும் விதிக்கப்படும்.கட்டணம் விதிக்கும் நடைமுறைக்கு வெளிப்படையாக இருப்பதை உறுதிச் செய்யவதற்காக விதிக்கப்படும்.
கட்டணம் விதிக்கப்பட்ட பைகளின் எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும்.அதிலிருந்து எவ்வளவு லாபம் கிடைத்தது என்பதைப் பற்றியும் கூற வேண்டும்.கிடைத்த தொகையை எவ்வாறு சுற்றுப்புறத் தேவைகளுக்கு பயன்பட்டது என்பதையும் பேரங்காடிகள் அறிவிக்க வேண்டும்.
குளிர்பான பாட்டில்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டத்திற்கு அமைச்சகம் தொழில்துறையினரின் கருத்துக் கேட்டு இருந்தது. அவர்களின் கருத்துக்காக அமைச்சகம் காத்திருக்கிறது.